in

குத்தாலம் மகா காளியம்மன் பால்குடம் காவடி திருவிழா

குத்தாலம் மகா காளியம்மன் பால்குடம் காவடி திருவிழா

 

வைகாசி திருவிழாவை முன்னிட்டு விக்ரமன் குத்தாலம் மகா காளியம்மனுக்கு மூன்றாம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது.விக்ரமன் குத்தாலம். இங்கு மிக பழமையான மகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

வைகாசி திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு பால்குடம்,காவடி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையிலிருந்து பால்குடம், அலகு காவடி எடுத்து மேல தாளம் முழங்க வீதியுலா வந்தனர்.

பின்னர் மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில் 200 க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்பாளின் அருளை பெற்றனர்.

What do you think?

செயலிகள் மூலம் டிக்கெட் வழங்கப்படுவதால் பாமர மக்கள் பயணிகள் கடும் அவதி

திருப்பதி மலையில் அனுமான் ஜெயந்தி