in

ஆத்தூர்  ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் 57-ஆம் ஆண்டு திருவிழா பூக்குழி வழிபாடு

ஆத்தூர்  ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் 57-ஆம் ஆண்டு திருவிழா பூக்குழி வழிபாடு

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தம் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் 57-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா முத்து மாரியம்மன் கோவில் 57-வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பித்தளைப்பட்டி அருகே குடகனாற்றில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வானவேடிக்கை மேளதாளத்துடன் சாமி ஆடியபடி பிள்ளையார் நத்தத்தில் உள்ள ஸ்ரீமகா முத்து மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

இன்றைய தினம் புதன்கிழமை அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர். இதில் சிறுவர்கள், பெரியவர்கள் அழகு குத்தி கையில் அக்னி சட்டி ஏந்தியபடி சிறுவர்களை தூக்கிக்கொண்டு பூக்குழி இறங்கினர்.

இரவு புராண நாடகம் நடைபெறுகிறது. திருவிழாவை காண திண்டுக்கல் சின்னாளப்பட்டி ஆத்தூர் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா

காலி குடங்களுடன் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம்