in

அரிசி அரவை ஆலைகளை இயங்கவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு

அரிசி அரவை ஆலைகளை இயங்கவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு

 

அரிசி அரவை ஆலைகளை இயங்கவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு; மில் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை பறிப்பதாக வேதனை; தனியார் லாரி உரிமையாளர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம், அரிசி ஆலை, லாரி ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் புகார்;

பேட்டி; 1. கண்ணன். 2.வேதநாயகம். தொழிலாளர்கள்.நாகை

நாகை மாவட்டம் கோவில்பத்தில் ஆசியாவின் இரண்டாவது நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் 1 லட்சத்து 74, ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுகின்றன.

இங்குள்ள நெல் மூட்டைகளை அரவைக்கு கொண்டு செல்லும் பணியில் நாகை மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் செய்து வருகின்றனர்.

இதனிடையே நாகை மாவட்டம் கீழ்வேளூர், பட்டமங்கலம் என 6, அரிசி அரவை மில்லுக்கு, தனியார் லாரி ஓட்டுநர்கள் சங்கத்தின் மூலம் 50 லாரிகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இரு சங்கத்தினர் இடையே எழுந்த பிரச்சனையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு அந்த பணி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால் பாதிப்புக்கு உள்ளான நாகை மாவட்ட அரிசி ஆலை லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதியை சேர்ந்த தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் நெல் இயக்கத்தில் 90 சதவீதம் வரை அவர்களே மேற்கொள்கின்றனர்.

10 சதவீதம் நெல் இயக்கத்தை மட்டுமே நாங்கள் மேற்கொள்கிறோம். அரிசி ஆலைகளை இயங்கவிடாமல் செய்து முடக்கி வருகின்றனர். அரிசி ஆலைகளை முடக்குவதால் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

What do you think?

தன்ஷிகா விஷால் காதலுக்கு ரூட் போட்டவர் இவரா?

தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள்