in

அருகன்குளம் ஸ்ரீ காட்டு ராமர் திருக்கோயில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம்

அருகன்குளம் ஸ்ரீ காட்டு ராமர் திருக்கோயில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம்

 

அருகன்குளம் ஸ்ரீ காட்டு ராமர் திருக்கோயில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.

திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளம் தாமிரபரணி நதிக்கரையில் ஜடாயு தீா்த்தக்கட்டத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ காட்டுராமர் திருக்கோயில். அமைதியான வனச் சூழலிலேயே இந்த ஆலயம் அமைந்திப்பதால் காட்டுராமா் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.

மூலஸ்தானத்தில் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியாா் மற்றும் தம்பி பரதனுடன் அருள்பாலிக்கின்றாா். தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குக் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ காட்டுராமர் ஆலயத்தில், ராமா் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கைகூப்பியபடி அருள்பாலிக்கின்றாா். சிறப்பு மிக்க காட்டு ராமர் கோவிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இதற்காக திருக்கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. பின்னா் சன்னதி முன்பு கலசங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு ஹோமமும் தொடா்ந்து பூா்ணாகுதியும் நடைபெற்றது.

பின்னா் மூலவா் ஸ்ரீராமா் சீதாபிராட்டியாா் சமேத லெட்சுமணா் ஆகியோருக்கு மஞ்சள்பொடி, வாசனைபொடி,மாபொடி,பால்,தயிா், பஞ்சாமிருதம், சந்தணம் போன்ற நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைப்போல அபயகஸ்த ஆஞ்சனேயருக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

நிறைவாக கலசங்கள் ஆலய பிரதஷணமாக கொண்டு வரப்பட்டு விமானம், மூலவா் மற்றும் ஆஞ்சனேயருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது, பின்னா் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த ஸ்ரீ ராமா் சீதை லெஷ்மணருக்கு மஹா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் இதில் கலந்துகொண்டு ராமரை தாிசித்து அருள்பெற்று சென்றனா்.

What do you think?

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில்  பிரம்மோற்சவம் திருத்தேரோட்டம்

சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை