கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில் பிரம்மோற்சவம் திருத்தேரோட்டம்
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில் அமைந்துள்ள, 108 திவ்ய தேசங்களில், 23வது ஆலயமான, ஆமருவியப்பன் ஆலயத்தில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் அமைந்துள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இந்த ஊரில், 2ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆமருவியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களுல், 23வது தேசமான இங்கு, மூலவர் தேவராஜன், 13அடி உயர சாளக்கிராம கல்லிலான் ஆனவர். ஆழ்வார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில், பிரம்மோற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

பெருமாள் மற்றும் தாயார் ஆகியோர் திருத்தேரில் எழுந்தருளினர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்குரத வீதிகள் வழியே திருத்தேரோட்டம் நடைபெற்றது பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.


