in

பிரிட்டன் தமிழ் செய்திகள்

Watch – YouTube Click

ஐரோப்பிய செய்திகள்

ஐரோப்பாவில் களை கட்டும் பொதுத்தேர்தல்

ஐரோப்பா ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 40 கோடி வாக்காளர்கள் பங்கேற்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகின்றனர்.

அகதிகள் விவகாரம், பருவநிலை மாற்றம், போன்ற பல்வேறு விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் முக்கிய முடிவு எடுப்பதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எனவே உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஐரோப்பிய தேர்தலை உற்று நோக்கி பார்க்கின்றன.

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து தப்பிய 98 வயது மூதாட்டி

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகள் தாண்டி நடைபெற்று வருகிறது.

உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால் அங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 98 வயது மூதாட்டி யான லிதியா என்பவர் ஆறு மைல் தூரம் காலாற நடந்து வந்து உயிர் தப்பியுள்ளார்.

தற்போது அவர் பிபீசிக்கு அளித்த பேட்டியில், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திலும் நான் உயிருடன் இருந்தேன். ஆனால் அந்தப் போரை விட தற்போதைய போர் மிகவும் அபாயகரமாக இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

பிரான்சில் கடலில் மூழ்கி ஏழு வயது சிறுமி பலி மகளைக் காப்பாற்ற முடியவில்லை என தந்தை உருக்கம்

பிரான்சின் களாய்ஸ் கடற்கரையில் கடந்த வாரம் 7 வயது மதிக்கத்தக்க சாரா என்ற சிறுமி கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது மகள் தனது கண்ணெதிரிலேயே அலையில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்ததாக அவரது தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் மகளின் மறைவு தன்னை நீங்காத துயரத்தில் ஆழ்த்தியதாகவும், இதிலிருந்து ஒருபோதும் மீண்டு வர இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உழைப்பாளர் தின அணிவகுப்பு பேரணி

மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் நேற்று உழைப்பாளர் தின பேரணி நடைபெற்றது.

துருக்கி, ஜகார்த்தா போன்ற நாடுகளிலும் பேரணி நடைபெற்றது. துருக்கியில் நடைபெற்ற பேரணையின் போது திடீரென போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் கைகலப்பு நிலவியது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவன் கொலை வழக்கில் வாலிபர் கைது

நார்த் ஈஸ்ட் லண்டனில் டேனியல் என்ற 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,
மார்க்கஸ் என்ற 36 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணை நடத்தி வருகின்றநர்.

ஸ்காட்லாந்து முதல்வராக ஜான் ஸ்வின்னி தேர்வாக வாய்ப்பு

ஸ்காட்லாந்து முஸ்லிம் முதல்வர் யூசுப் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் வேறு வழி இல்லாமல் அவர் பகுதியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

இந்தச் சூழலில், ஜான் சுவின்னி என்பவர் அடுத்ததாக ஆளுங்கட்சித் தலைவராக வருவதற்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார். அவர்தான் அடுத்த முதல்வராக பதவியேற்பார் என்றும் ஸ்காட்டிஷ் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

75 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண்ணின் முகம் வெளியீடு

75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் நியாண்டர்தாள் என்று அழைக்கப்படுகின்றனர்.

அவர்களைக் குறித்து ஐரோப்பிய விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதாவது நியாண்டர் தாள் மக்களின் உருவம் எப்படி இருக்கும், அவர்களது முகபாவனை எவ்வாறு இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சியை நடைபெற்று வந்தது.

ஆய்வின் முடிவில் நியூண்டர் தாள் பெண்ணின் முக வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதைத்தான் நீங்கள் இப்போது வீடியோவில் பார்க்கிறீர்கள்.

 

Watch – YouTube Click

What do you think?

சொந்த கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை