புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்
அரிச்சந்திரபுரம் மற்றும் வக்ராநல்லூர் பகுதிகளில் சுமார் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட அரிச்சந்திரபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 27 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் அதே பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையையும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதேபோன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வக்ராநல்லூர் ஊராட்சியில் உள்ள பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கான 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிப்பறையையும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பழுது நீக்கப்பட்ட நான்கு வகுப்பறை கட்டிடங்களையும் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தையும் 26 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் நீர் மங்கலம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையையும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் தேக்க தொட்டியையும் அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் பெரிய கொத்தூர் ஊராட்சியில் உள்ள உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஸ்மார்ட் கிளாஸிற்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி ஒன்றையும் அதேபோன்று பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் டிவியையும் அவரது சொந்த செலவில் சட்டமன்ற உறுப்பினர் வாங்கி கொடுத்து அதனை திறந்து வைத்தார்சட்டமன்ற உறுப்பினர் வாங்கி கொடுத்து அதனை திறந்து வைத்து மாணவ மாணவிகளுடன் உரையாடினார்.
மேலும் வேளுக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையையும் பேருந்து நிழற் குடையையும் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் திமுக மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐ.வி குமரேசன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அரிச்சந்திரபுரம் செல்வம் வக்ராநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இல்முன்னிஷா பேகம் அரிச்சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி செல்வம் வேளுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் நீலமணி பிரகாஷ் பெரிய கொத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணதாசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.