26
ஜூலை
2025
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூலை 26 தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்
27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.
மேஷம் (Aries)
மேஷ ராசி அன்பர்களே!
மனதளவில் புதிய பாதை புலப்படும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மிகப் பணியில் விருப்பம் அதிகரிக்கும். சிறு சிறு கடன் பிரச்சனைகளை குறைப்பீர்கள்.
வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்பு உண்டாகும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசி அன்பர்களே!
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். அரசு பணிகளில் பொறுமை வேண்டும். விதண்டாவாதமான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும்.
திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் கால விரயம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஆரஞ்சு நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : பேச்சுகளில் கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : விரயம் உண்டாகும்
மிதுனம் (Gemini)
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரரின் வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாகும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
புனர்பூசம் : தெளிவு ஏற்படும்
கடகம் (Cancer)
கடக ராசி அன்பர்களே!
மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். கவலை மறையும் நாள்
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : லாபம் ஏற்படும்.
ஆயில்யம் : நெருக்கடிகள் மறையும்.
சிம்மம் (Leo)
சிம்மம் ராசி அன்பர்களே!
பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
வியாபாரத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பாராட்டு நிறைந்த நாள்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : அனுபவம் வெளிப்படும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.
கன்னி (Virgo)
கன்னி ராசி அன்பர்களே!
நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.
நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். ஊக்கம் நிறைந்த நாள்
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : தடைகள் குறையும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : தடுமாற்றம் ஏற்படும்
துலாம் (Libra)
துலாம் ராசி அன்பர்களே!
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.
வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உங்களின் கருத்துக்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்
சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
சுவாதி : முயற்சிகள் கைகூடும்.
விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம் (Scorpius)
விருச்சிகம் ராசி அன்பர்களே!
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். வரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும்.
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்பு உயரும். பொறுமை வேண்டிய நாள்
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.
கேட்டை : மதிப்பு உயரும்
தனுசு (Sagittarius)
தனுசு ராசி அன்பர்களே!
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும்.
பொழுதுபோக்கு விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் பொறுமை வேண்டும். முன் கோபமின்றி செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும். நற்செயல் நிறைந்த நாள்
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : விரயங்கள் ஏற்படும்.
உத்திராடம் : மதிப்பு உண்டாகும்
மகரம் (Capricorn)
மகர ராசி அன்பர்களே!
புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வி நிமிர்த்தமான குழப்பங்கள் குறையும். சாந்தம் வேண்டிய நாள்
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.
திருவோணம் : ஏற்ற, இறக்கமான நாள்.
அவிட்டம் : குழப்பங்கள் குறையும்
கும்பம் (Aquarius)
கும்ப ராசி அன்பர்களே!
அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும்.
திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ரசனைத் தன்மையில் புதுமை உண்டாகும். அசதி நிறைந்த நாள்
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : மதிப்பு உயரும்.
பூரட்டாதி : புதுமையான நாள்
மீனம் (Pisces)
மீன ராசி அன்பர்களே!
சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நிர்வாகம் சார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : புதுமையான நாள்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : அனுபவம் ஏற்படும்
பஞ்சாங்கம்
நாள் | சனிக்கிழமை |
---|---|
திதி | துவிதியை |
நட்சத்திரம் | ஆயில்யம் மாலை 6.11 வரை பிறகு மகம் |
யோகம் | மரணயோகம் மாலை 6.11 வரை பிறகு அமிர்தயோகம் |
ராகுகாலம் | காலை 9 முதல் 10.30 வரை |
எமகண்டம் | பகல் 1.30 முதல் 3 வரை |
நல்லநேரம் | காலை 7.30 முதல் 8.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை |
சந்திராஷ்டமம் | பூராடம் மாலை 6.11 வரை பிறகு உத்திராடம் |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |