ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 9 நவகாளி திருநடன வீதி உலா.
கும்பகோணத்தில் சிங்காரம் தோப்பில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 35-ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளி திருநடன வீதி உலா நடைபெற்றது.
கும்பகோணத்தில் சிங்காரத் தோப்பில் உள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து மாரியம்மனுக்கும், ஸ்ரீ முத்து முனீஸ்வரர் சாமிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமிக்கும், ஸ்ரீ ஐயப்பனுக்கும், மற்றும் பல பரிவாரங்களுக்கும் 35-ஆம் ஆண்டு மகா கோடாபிஷேக ஆராதனை மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன், 41-ஆம் ஆண்டு சுந்தரமாகாளி, திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று,
ஆலயத்திலிருந்து, தேவி சுந்தரமாகாளியம்மன், தேவி பச்சைகாளியம்மன், தேவி மஞ்சம்மா காளியம்மன், தேவி சந்தன காளியம்மன், தேவி கருமாரியம்மன், தேவி நீலாம்பரி அம்மன், தேவி செந்தூர அம்மன், தேவி நவசக்தி காளியம்மன், தேவி சிவசக்தி காளியம்மன் ஆகிய 9 நவ தேவிகளும் திருநடன வீதி உலா இன்று புறப்பட்டு 4 நாட்கள் நடைபெறுகிறது.


இதனையொட்டி, 9 நவகாளி திருநடனத்துடன் பவனி வரும் வீதிகளில், ஒவ்வொரு குடும்பத்தினரும், மாவிளக்கு ஏற்றிவைத்து, தட்டில் பழங்கள், தேங்காய் மலர்சரங்கள், எலுமிச்சம் பழம், மங்கல பொருட்களான வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் 9 நவகாளிக்கும், தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அதன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்தும், தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர்.
அப்போது பூசாரி தீபாராதனை செய்ய, 9 நவகாளிகள் தனது திருக்கரங்களால், கூடியிருந்த பக்தர்களுக்கு திருநீற்று பிரசாதங்களை வழங்கியது. 9 நவக்களிகள் வீதிகளில் வரும் போது பக்தர்களுக்கும் தன்னை அறியாமல் அருள் வந்தன.


