நெய்வேலியில் இரிடியம் விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது
நெய்வேலியில் இரிடியம் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்ற 7 பேரை தெர்மல் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 30-ல் இருடியம் வைத்து ஒரு கும்பல் கடந்த ஒரு மாதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
இதனை திட்டமிட்ட குற்றம் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் வட்டம் 30-ல் உள்ள முருகன் என்பவரது வீட்டில் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் உள்ளே சென்று பார்த்த பொழுது அப்பொழுது வீட்டின் உள்ளே ஏழு பேர் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இரிடியம் வைத்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களை தெர்மல் போலீசாரிடம் ஒப்படைத்தனர் பின்னர் அவர்களை விசாரணை செய்ததில்.
நெய்வேலி வட்டம் 30 பகுதியை சேர்ந்த முருகன் இவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாக அவரது நண்பர்கள் மணிகண்டன், விக்னேஸ்வரன், ஆனந்தன், சேகர், ஏழுமலை, பிரவீன் குமார் இவர்களிடம் கூறியுள்ளார் பின்னர் இவர்கள் ஏழு பேர் முருகன் வீட்டில் அந்த இரிடியத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்ங்களிலும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் ஆட்களிடம் செல்போன் மூலம் அந்த இருடியம் 150 கோடி முதல் 400 கோடி வரை பேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது ஒருவரிடம் நாங்கள் அந்த பொருளை விற்பதாக பேரம் பேசும் பொழுது அவர் போலீசார் என்பது தெரியாமல் அவரிடம் விலை பேசினோம் அதன் பேரில் அவர் இரிடியத்தை பார்க்கணும் என்று கூறினார் அவரிடம் காட்டுவதற்காக அவரை நாங்கள் இருக்கும் இடத்திற்கு தகவல் சொல்லி வர வைத்தோம் பின்னர் அவர் எங்களை கையும் களவுமாக பிடித்து விட்டார் என்று கூறினர்.
பின்னர் தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து நெய்வேலி வட்டம் 30 பகுதியை சேர்ந்த முருகன் வயது 50, கொள்ளு காரன் குட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 40, நெய்வேலி வட்டம் 30 சேர்ந்த ஆனந்தன் வயது 38, கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் வயது 33, பிரவீன் குமார் 41, திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சேகர் வயது 47, ஏழுமலை வயது 43, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

இந்த பொருள் இரிடயம் தானா என்று உறுதிப்படுத்த நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதனை ஆய்வுக்கு அனுப்பி அதன் பின்பு தான் அது உண்மையான இருடியமா அல்லது போலியா என்று தெரியவரும் இவர்கள் போலியாக இரிடியம் இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


