in

பாபநாசத்தில் பரிதாபம்

பாபநாசத்தில் பரிதாபம்

 

திருமணமாகி 2 ஆண்டுக்குள் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை கும்பகோணம் சப் கலெக்டர் விசாரணை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள படுகை புதுத் தெருவில் வசித்து வருபவர் சங்கர் வயது -26, இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கற்பகம் வயது -20, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

கற்பகம் தற்போது பாபநாசத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் கற்பகம் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
மனம் முடிந்த கற்பகம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டிற்கு அவருடைய கணவர் சங்கர் வந்து பார்த்தபொழுது வீடு பூட்டி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வீட்டின் கதையை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது கற்பகம் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கற்பகத்தின் தந்தை ராமலிங்கம் வயது 45 என்பவர் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேலு, உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஜ் ,முருகதாஸ், தலைமை காவலர் காளிதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் கற்பகத்திற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியதால் கும்பகோணம் சப் கலெக்டர் (பொறுப்பு ) ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

What do you think?

நாமக்கல் மணப்பள்ளி சிவ ஆலயத்தில் தெய்வதிருக்கல்யாண வைபவ நிகழ்வு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவி