in

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

 

தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்துள்ள தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி என்பவருக்கும் அவரது அண்ணன் மகன் முருகானந்தம் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேன்மலர் பள்ளி அனுமதி பெற்ற இடத்தை கடந்தும் அனுமதி பெற்ற முறையிலும் கட்டப்படவில்லை என முருகானந்தம் வழக்கு தொடர்ந்து நில அளவை செய்ய நேற்று தாராபுரம் வந்திருந்தார்.

தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரகுராம் மற்றும் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் என மூன்று பேரும் தேன்மலர் பள்ளிக்கு சென்ற போது பள்ளியின் உரிமையாளர் தண்டபாணி கூலிப்படையினரை வைத்து முருகானந்தத்தை வெட்டி கொலை செய்தனர்.

தடுக்க முயன்ற இரண்டு வழக்கறிஞர்களுக்கும் அரிவாள் வெட்டு படுகாயத்துடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக பள்ளியின் உரிமையாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையினர் ஐந்து பேர் தாராபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று பள்ளியின் உரிமையாளர் தண்டபாணி கூலிப்படையினர் தட்சிணாமூர்த்தி(29), ராம் (22), சுந்தரன்(26), நாகராஜன்(29), நாட்டுதுரை(65) என ஆறு பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What do you think?

டாப் குக் டூப் குக் சீசன் 2 UPDATE

மதராசி First சிங்கள் நாளை வெளியாகிறது