in

கொறடா தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் மீனாட்சி சுந்தரம் 5ம் ஆண்டு நினைவு தினம்

கொறடா தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் மீனாட்சி சுந்தரம் 5ம் ஆண்டு நினைவு தினம்

 

திமுக சட்டமேலவை கொறடா தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் மீனாட்சி சுந்தரம் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: திருக்குவளை முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை உணவு வழங்கி மகிழ்ந்த குடும்பத்தினர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற மேலவை கொறடாவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனமான பாவலர் க. மீனாட்சி சுந்தரம் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் தலைஞாயிறு, திருமருகல், நாகப்பட்டினம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சார்பில் திருக்குவளை கருணாலயா முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு காலை உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

கருணாலயா இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்கள் குடும்பத்தினரை வாழ்த்தி மறைந்த மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்க்கை சாதனைகளை விளக்கிப் பேசி நன்றி தெரிவித்தனர்.

What do you think?

 திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் திருத்தேர் வெள்ளோட்டம் 

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்