in

4 ஹிட் 18 பிளாப்… அதிர்ச்சி அளிக்கும் கோலிவுட்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்..!

4 ஹிட் 18 பிளாப்… அதிர்ச்சி அளிக்கும் கோலிவுட்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்..!

2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கோலிவுட்டுக்கு ஒரு மோசமான அனுபவத்தையே கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் மொத்தம் வெளியான 22 படங்களில் 18 படங்கள் தோல்வியை சந்தித்து உள்ளன.

Kollywood Box Office Report
போன வருஷம் (2025) ஜனவரி மாசம் 26 படங்கள் ரிலீஸ் ஆச்சு. இந்த வருஷம் (2026) ஜனவரி மாசம் அந்த எண்ணிக்கையை விட கொஞ்சம் கம்மியா 22 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கு. எண்ணிக்கை கொஞ்சம் கம்மிதான் என்றாலும், வாரத்துக்கு 4-க்கும் மேல படங்கள் ரிலீஸ் ஆகுறது நம்ம தயாரிப்பாளர்கள் மத்தியில இருக்குற ஆர்வத்தைக் காட்டுது.

ஜனவரி மாசம் முடியுற நேரத்துல மட்டும் ஒரு பெரிய பட்டாளமே தியேட்டருக்கு வந்துருக்கு. அதுல முக்கியமான சில படங்கள்:
க்ரானி (Granny): ஒரு த்ரில்லர் அனுபவமா வந்திருக்கு. காந்தி டாக்ஸ் (Gandhi Talks): விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்புல வசனமே இல்லாத ‘சைலண்ட்’ மூவியா வந்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கு.

லாக் டவுன் (Lockdown): அனுபமா பரமேஸ்வரன் நடிப்புல ஒரு சீரியஸான கதையா ரிலீஸ் ஆகிருக்கு.

கருப்பு பல்சர் (Karuppu Pulsar): அட்டகத்தி தினேஷ் நடிப்புல ஒரு அதிரடி ஆக்ஷன் படமா வந்திருக்கு. இது தவிர மெல்லிசை, திரைவி, ராட்டா-னு சின்ன பட்ஜெட் படங்களும் வரிசையா வந்து தியேட்டர்களை ஆக்கிரமிச்சிருக்கு.

இந்த மாசத்துல வசூல் ரீதியா பெரிய கவனத்தை ஈர்த்தது சிவகார்த்திகேயனோட ‘பராசக்தி’ தான். அதுக்கு அப்புறம் ‘தலைவர் தம்பி தலைமையில’ மாதிரியான படங்கள் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துருக்கு. சின்ன படங்களோ பெரிய படங்களோ, ஜனவரி மாசமே 22 படங்கள் வந்தது கோலிவுட்ல ஒரு பெரிய வைப் (Vibe) கொடுத்திருக்கு

100 கோடி கிளப்ல ‘பராசக்தி’! 2026-ன் முதல் மெகா ஹிட்

இந்த வருஷம் ஜனவரி மாசம் ரிலீஸ் ஆன படங்கள்ல பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வசூல்ல ‘பராசக்தி’ தான் இப்போ டாப்ல இருக்கு.

பொங்கல் ரிலீஸா வந்த ‘பராசக்தி’ படம் ஃபேமிலி ஆடியன்ஸை அப்படியே தியேட்டர் பக்கம் இழுத்துடுச்சு. படத்துக்கு கிடைச்ச பாசிட்டிவ் ரிவியூஸ்னால, 2026-ஆம் ஆண்டோட முதல் 100 கோடி வசூல் பண்ணுன படம்ங்கிற பெருமையை இது தட்டிட்டு போயிருக்கு. எஸ்கே-வோட கரியர்ல இது ஒரு முக்கியமான மைல்கல்!தியேட்டருக்கு வராம டைரக்டா ஓடிடி-யில ரிலீஸ் ஆன படங்களும் இந்த லிஸ்ட்ல இருக்கு: ‘சல்லியர்கள்’ 2026-ன் முதல் படமா இது ‘OTT Plus’ தளத்துல நேரடியா ரிலீஸ் ஆச்சு.

‘அனந்தா’ இந்தப் படம் ஜனவரி 13-ஆம் தேதி ஓடிடி-யில வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. நிச்சயமா இந்தப் பொங்கலுக்கு தியேட்டர்ல வரும்னு எல்லாரும் எதிர்பார்த்த படம் ‘ஜனநாயகன்’.

ஆனா, கடைசி நேரத்துல வந்த சில கோர்ட் கேஸ், சட்ட சிக்கல்களால இந்தப் படம் ரிலீஸ் ஆகாம அப்படியே நின்னுடுச்சு. இந்தப் படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு தெரியாம ரசிகர்கள் இப்போ வரைக்கும் குழப்பத்துல இருக்காங்க.

100 கோடி பட்ஜெட்.. 30 கோடி வசூல்! ஜீவாவின் செம ‘கம்பேக்’!

சினிமாவுல எப்பவுமே பெரிய பட்ஜெட் படம் தான் ஜெயிக்கணும்னு இல்ல, நல்ல கண்டென்ட் இருந்தா சின்ன பட்ஜெட் படமும் ஜெயிக்கும்னு ஜீவா நடிச்ச இந்த படம் நிரூபிச்சிருக்கு.

ஜீவா நடிப்புல ரொம்ப அமைதியா ரிலீஸ் ஆன படம் தான் “தலைவர் தம்பி தலைமையில்”.

இந்த படத்தோட மொத்த பட்ஜெட்டே வெறும் 10 கோடி தானாம்.
ஆனா, படம் ரிலீஸ் ஆகி மக்களோட ‘மவுத் டாக்’ (Mouth Talk) நல்லா இருந்ததுனால, இப்போ வரைக்கும் 30 கோடிக்கும் மேல வசூல் பண்ணி சாதனை படைச்சிருக்கு.
போட்ட காசை விட மூணு மடங்கு லாபம் கிடைச்சதுனால, தயாரிப்பாளர்ல இருந்து தியேட்டர் காரங்க வரைக்கும் எல்லாரும் செம ஹேப்பி! ஜீவாவுக்கு இது ஒரு சூப்பர் கம்பேக் மூவி.

‘வா வாத்தியார்’ – கார்த்திக்கு ஒரு சறுக்கல்:
பொங்கல் ரேஸ்ல பெரிய எதிர்பார்ப்போட வந்த படம் கார்த்தியோட “வா வாத்தியார்”. ஆனா, என்ன ஆச்சுன்னு தெரியல, படம் ரசிகர்களை அவ்வளவா கவரல.

கார்த்தி படங்களுக்கு எப்பவுமே ஒரு மினிமம் கேரண்டி இருக்கும், ஆனா இந்த படம் அவரோட கரியர்ல ஒரு எதிர்பாராத தோல்வியா (Flop) அமைஞ்சது அவரோட ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கு.

வாஷ்-அவுட் ஆன திரௌபதி 2!

ஜனவரி 23-ஆம் தேதி சில புதுப் படங்கள் ரிலீஸ் ஆச்சு. ஆனா, அதே டைம்ல தான் அஜித்தோட ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆகி தியேட்டர்ல புயல கிளப்புச்சு. இயக்குநர் மோகன்ஜி இயக்கத்துல வந்த ‘திரௌபதி 2’ மேல பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனா, மக்கள் எல்லாரும் மங்காத்தா பக்கமே போனதுனால, திரௌபதி 2 படத்துக்கு சரியான ஓப்பனிங் கிடைக்கல. ரிலீஸ் ஆன ஒரே வாரத்துல படம் வாஷ்-அவுட் (Washout) ஆகிடுச்சு. இதனால வருத்தப்பட்ட டைரக்டர் மோகன்ஜி, மங்காத்தாவால தான் என் படம் பாதிக்கப்பட்டுடுச்சுனு ஒரு வீடியோவே போடுற நிலைமைக்கு போயிட்டாரு.

திரௌபதி 2-க்கு போட்டியா வந்த படம் ‘ஹாட் ஸ்பாட் 2’. இந்தப் படம் பெரிய ஹிட் இல்லனாலும், முதலுக்கு மோசம் இல்லாம போட்ட காசை எடுத்து தப்பிச்சுடுச்சு. அட்லீஸ்ட் போட்ட முதலாவது கைக்கு வந்துச்சேன்னு அந்தப் படக்குழு நிம்மதியா இருக்காங்க.

காந்தி டாக்ஸ் & லாக்டவுன்:
ஜனவரி கடைசி வாரத்துல வந்த விஜய் சேதுபதியோட ‘காந்தி டாக்ஸ்’ மற்றும் ‘லாக்டவுன்’ படங்களுக்கும் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வரல. புதுசு புதுசா எக்ஸ்பெரிமெண்ட் பண்ணாலும், தியேட்டர்ல ஆடியன்ஸ் என்னவோ மாஸ் படங்களையே விரும்புறாங்கன்னு இதுல இருந்து தெரியுது.

மொத்தத்துல ஜனவரி மாசம் கோலிவுட்டுக்கு மிக்ஸட் பேக்கா (Mixed Bag) தான் முடிஞ்சிருக்கு. புதுசு புதுசா வந்த 22 படங்கள்ல பராசக்தி மாதிரியான சில படங்கள் தான் காசு பார்த்துருக்கு!

ஜனவரி ரிப்போர்ட்: 22 படங்கள்.. ஆனா தேறுனது 4 தான்! ‘ஜனநாயகன்’ வருமா?
மொத்தமா 22 படங்கள் மோதுனதுல, 18 படங்கள் ரசிகர்களைக் கவர முடியாம ‘பிளாப்’ ஆகிடுச்சு. சர்ச்சையும், சர்ப்ரைஸும் கலந்த ஒரு மாசமா இது முடிஞ்சிருக்கு.

ஹிட் அடிச்ச அந்த ‘நால்வர்’ குழு: கடுமையான போட்டியிலயும் ஜெயிச்சு லாபம் கொடுத்த படங்கள் இவங்கதான்:

பராசக்தி: எஸ்கே-வோட 100 கோடி வசூல் வேட்டை!

தலைவர் தம்பி தலைமையில்: 10 கோடியில வந்து 30 கோடி அள்ளுன ஜீவாவின் சர்ப்ரைஸ் ஹிட்.

மங்காத்தா (ரீ-ரிலீஸ்): பழைய படம்னாலும் ஏகே-வோட அந்த ‘விநாயக் மகாதேவன்’ மேஜிக் இப்போவும் ஒர்க் அவுட் ஆகி தியேட்டரை அதிர வச்சிருக்கு.

ஹாட் ஸ்பாட் 2: மத்த படங்கள் வாஷ்-அவுட் ஆனப்போ, இது மட்டும் எப்படியோ தப்பிச்சு ‘சேஃப்’ ஜோனுக்கு வந்துடுச்சு.

திரௌபதி 2′, ‘காந்தி டாக்ஸ்’, ‘லாக்டவுன்’னு நிறைய படங்கள் வந்த வேகத்துலயே தியேட்டரை விட்டுப் போயிட்டாங்க.

இதனால தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நஷ்டம் தான்.இப்போ எல்லாரோட கண்ணும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் மேலதான் இருக்கு. பிப்ரவரி மாசம் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய ரிலீஸ்க்கு ரெடியா இருந்தாலும், ஆடியன்ஸ் வெயிட் பண்றது இந்தப் படத்துக்காகத்தான்.

ஏன்னா, தேர்தல் (Election) நெருங்கிட்டே இருக்கு. இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதைங்கிறதுனால, பிப்ரவரி மாசத்துக்குள்ள ரிலீஸ் பண்ணியே ஆகணும். ஒருவேளை இந்த மாசம் மிஸ் ஆச்சுன்னா, அப்புறம் எலெக்ஷன் முடிஞ்சுதான் படம் தியேட்டருக்கு வரும். அதுவரைக்கும் வெயிட் பண்ண முடியுமாங்குறதுதான் படக்குழுவோட பெரிய கவலை.

What do you think?

கர்நாடக அரசின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி டெல்டா மாவட்டத்தை காப்பாற்றிய இயக்கம் வைகோ பெருமிதம்

கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் உள்ளவர்கள் மீது மோதி விபத்து