ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 33 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா
சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 33 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா முன்னிட்டு முளைப்பாரி வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை இந்திரா நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 33 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழா அம்மனுக்கு காப்பு கட்டுதளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழா நாட்களில் மூலவர் முத்துமாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
விழாவின் ஒரு நிகழ்வாக முளைப்பாரி ஊர்வலம் வைபவம் நடைபெற்றது முன்னதாக மூலவர் முத்துமாரயம்மன் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் கோவில் முன்பு கும்மி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.

பின்னர் நவதானியங்கள் கொண்டு வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர் அம்மன் கரகத்தை கோவில் பூசாரி எடுத்து முன் செல்ல மங்கள வாத்தியங்களுடன் முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர் தெப்பக்குளத்தில் கரைத்தனர்.
இவ்விழாவில் கோவில் நிர்வாகிகள் சிங்கமுத்து மதியழகன் உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டனர்.


