புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335-ம் ஆண்டு கொடியேற்ற விழா
புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335-ம் ஆண்டு கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபட்டுச் சென்றனர்.
புதுச்சேரி,அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335 ஆம் ஆண்டு ஆடம்பரத் தேர் பவனி வருகின்ற 14-ஆம் தேதி நடக்கிறது. இதனை ஒட்டி இன்று காலை சிறப்பு திருப்பலியுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக பகண்டை மிஷின் குருத்துவ பொன்விழா நாயகர் ஜான் போஸ்கோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினார்.
கொடியேற்ற விழாவிற்கு அரியாங்குப்பம் பங்குத்தந்தை அருள்தாஸ் தலைமை தாங்கி கொடிக்கு சிறப்பு ஆராதனை நடத்தி பங்கு மக்கள் மத்தியில் ஊர்வலமாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில் பெர்னாட், டோமினிக், பங்கு நிர்வாக குழு, தன்னார்வலர்கள் குழு, அருட் சகோதரிகள், அரியாங்குப்பம் பங்கு மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


