‘3 BHK’ ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வு போராட்டம்
க்ரைம் த்ரில்லர் தமிழ் படமான 8 தோட்டாக்கள் (2017) மூலம் அறிமுகமான இயக்குனர் ஸ்ரீ கணேஷ், முற்றிலும் மாறுபட்ட உணர்ச்சிபூர்வமான Family Story…கொடுத்திருக்கிறார்.
அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய ‘3BHK வீடு’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘3 BHK’ படத்தை உருவாக்கி இருக்கிறார்.
சித்தார்த் தனது தோற்றத்தை மாற்றி, படத்தில் மாறுபட்ட கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆர். சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் நடுத்தர வர்க்க தந்தை மற்றும் தாயின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிரெய்லரால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘3 BHK’, நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இயக்குனர் ஒரு மனதைத் தொடும் உணர்ச்சிகரமான படத்தை கொடுத்திருகிராறா பார்போம்..
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வாசுதேவன் (ஆர். சரத்குமார்), மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளார்.
சொந்தமாக ஒரு வீடு கட்டி, தனது மகன் (சித்தார்த்), மகள் (மீதா ரகுநாத்) மற்றும் மனைவி (தேவயானி) ஆகியோருடன் வீட்டில் அழகான நினைவுகளை உருவாக்குவதே வாழ்நாள் இலட்சியமாக இருக்கும் சரத் சொந்த வீடு கட்டும் தனது கனவை நனவாக்கினாரா? சொந்த வீடு கட்டுவதற்காக குடும்பத்தினர் எதிர்கொண்ட சவால்கள் என்ன? என்பதே மீதி கதை.
பிரபு வேடத்தில் சித்தார்த் தனது சிறந்த நடிப்புகளில் ஒன்றை வெளிப்படுத்திஇருக்கிறார். ஒரு நடுத்தர குடும்பத்தின் மகன் பாத்திரத்தில், படம் முழுவதும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்.
வாசுதேவன் வேடத்தில் சரத்குமார் நடிப்பு எதார்த்தம். ஆர்த்தி வேடத்திற்கு மீதா ரகுநாத் பொருத்தமாக இருக்கிறார். இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அம்மா வேடத்தில் தேவயானி நிபந்தனையின்றி தனது குடும்பத்தை நேசிக்கும் ஒரு தாயாக நடித்திருக்கிறார்.
ரியல் எஸ்டேட் புரோக்கர்…ராக வரும் யோகி பாபு சில காட்சிகளில் தோன்றினாலும், தனது முத்திரையை பதித்திருக்கிறார் . ஐஷு வேடத்தில் சைத்ரா ஜே. ஆச்சார் சித்தார்த்துடனான அவரது கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்கிறது.
அம்ரித் ராம்நாத் படத்திற்கு நல்ல இசையை கொடுத்துள்ளார். அவரது பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் சுவாரசியத்தை பாதிக்காமல் சிறப்பாக இருக்கிறது. தினேஷ் பி. கிருஷ்ணன் & ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு அருமை. கணேஷ் சிவா இரண்டாம் பாதியில் எடிட்டிங் …கில் சொதப்பிவிட்டார்.. தயாரிப்பு சாந்தி டாக்கீஸ்.
பெரும்பாலான மக்களின் வாழ்நாள் லட்சியம் ஒரு வீட்டை சொந்தமாக்குவது. குறிப்பாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினரின் கனவும் இதுவே.
வளர்ந்து வரும் காலத்தில், ஒரு வீட்டை வாங்குவதற்காக நம் பெற்றோர்கள் அயராது உழைத்து, மகிழ்ச்சிகளைக் தியாகம் செய்வதை நாம் பார்த்திருகிறோம். ஸ்ரீ கணேஷின் ‘3 BHK’ படம் அத்தகைய ஒரு குடும்பத்தின் கதை. ஒட்டுமொத்தமாக, 3 BHK படங்களில் சில குறைபாடுகள் இருந்தாலும், உங்கள் இதயமும் மனமும் உணர்ச்சிவசப்பட்டும் தருணங்கள் படத்தில் நிறைய உள்ளன.
மேலும், நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால், படத்தில் வரும் பல காட்சிகளுடன் நீங்கள் தொடர்புடையவராக உணர்வீர்கள் .


