in

ஒரே நேரத்துல 3 அவார்ட்ஸ்!தமிழக அரசுக்கு நன்றி சொன்ன நயன்தாரா… நெகிழ்ச்சியில் மகிழ்ச்சி


Watch – YouTube Click

ஒரே நேரத்துல 3 அவார்ட்ஸ்!தமிழக அரசுக்கு நன்றி சொன்ன நயன்தாரா… நெகிழ்ச்சியில் மகிழ்ச்சி

 

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இப்போ ஏறுமுகம்தான்!

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவுல, நயன் ஒரே மேடையில மூணு விருதுகளைத் தட்டித் தூக்கி அசத்தியிருக்காங்க.

இந்த சந்தோஷத்தை அவங்க இன்ஸ்டாகிராம்ல போட்டோஷூட் நடத்தி ஷேர் பண்ணிருக்காங்க.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கையால இந்த விருதுகளை நயன் வாங்கினாங்க: கோபி நயினார் இயக்கத்துல வந்த ‘அறம்’ படத்துல கலெக்டர் மதிவதனியா நடிச்சதுக்காக சிறந்த நடிகை விருது.

ரௌடி பிக்சர்ஸ் சார்பா தயாரிச்ச இந்தப் படத்துக்கு ஒரு விருது. சர்வதேச அளவுல பாராட்டுகளை அள்ளுன இந்தப் படத்துக்காக இன்னொரு விருது.
“மூணு விருதுகள்… நிஜமாவே நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன்”னு நயன்தாரா ரொம்ப எமோஷனலா தமிழக அரசுக்கு நன்றி சொல்லிருக்காங்க.

இந்த வருஷம் ஆரம்பத்துல இருந்தே நயனுக்கு எல்லாமே சக்சஸ் தான்: ஜனவரி மாசம் சிரஞ்சீவி கூட நடிச்ச ‘மனசங்கர வரபிரசாத்காரு’ படம் ரிலீஸாகி வசூலை அள்ளுச்சு.

வர்ற மார்ச் 19-ம் தேதி ‘கேஜிஎஃப்’ யாஷ் கூட நடிச்சிருக்கிற ‘டாக்சிக்’ படம் ரிலீஸாகப் போகுது.

இது மேல பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு. பாலகிருஷ்ணா படத்துல நடிக்க நயன் கிட்ட பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. 11 கோடி சம்பளம் கேட்டதால சின்னதா ஒரு பட்ஜெட் டிஸ்கஷன் ஓடுதுனு ஒரு பக்கம் பேச்சு கிளம்பிருக்கு.


Watch – YouTube Click Shorts

What do you think?

மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா……

சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சைடு கட்டையில் மோதி விபத்து