விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 268 வது ஜெயந்தி விழா
விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 268 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு செஞ்சியில் நடைபெற்ற குருபூஜையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம் …..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் யாதவ மக்கள் சங்கம் சார்பில் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுரு படம் அமைத்து 268 வது ஜெயந்தி குருபூஜை அனுசரிக்கப்பட்டது.
குருபூஜை விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி கல்லூரி நிறுவனத்தின் தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி தலைமை ஏற்று நடைபெற்ற இவ்விழாவில். மாவீரன் அழகுமுத்துக்கோன் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் குருபூஜையை கொண்டாடினர்..
இந்நிகழ்ச்சியில் செஞ்சி நகரம், கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் பகுதிகளைச் சார்ந்த யாதவ பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…


