ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா
திண்டிவனம் நல்லிய கோடன் நகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா ஊஞ்சல் உற்சவம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் திருக்கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய சாகை வார்த்தல் மற்றும் ஆடி பெருவிழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ குறத்தி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து குறத்தி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் ஸ்ரீ முத்தாலம்மனுக்கு பஞ்சமுக தீபம் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


