in

வீட்டில் 22 பவுன் திருட்டு, லாக்கரோடு எடுத்து சென்ற நூதன திருடர்கள்

வீட்டில் 22 பவுன் திருட்டு, லாக்கரோடு எடுத்து சென்ற நூதன திருடர்கள்

 

மயிலாடுதுறையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 22 பவுன் திருட்டு, லாக்கரோடு எடுத்து சென்ற நூதன திருடர்கள். தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறையில்,டவுன் எக்ஸ்டன்சன் பகுதியில் சாரதா நகரில் வசிப்பவர் ஹரிகரன். இவரது மகன்  மணிகண்டன், கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறார்.

மனைவி விஜயா திருச்சி உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் தன், தந்தையின் வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். மணிகண்டன் மட்டும் தினமும் இங்கிருந்து கும்பகோணத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார்.

சனி, ஞாயிறு கிழமைகளில் திருச்சியில் மனைவியுடன் தங்கி படிக்கும் குழந்தைகளை காண செல்வார். அப்படி நேற்று கல்லூரிக்கு சென்று அப்படியே திருச்சி சென்று விட்டார், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இரவு திருடர்கள் கதவை உடைத்து வீட்டில் நுழைந்து அங்கிருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 22 சவரன் பவுனுடன் லாக்கர் மற்றும் வாசலில் நின்றிருந்த ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்தையும் எடுத்து சென்று உள்ளனர்.

காலையில் மணிகண்டனின் தந்தை ஹரிகரன் மகனின், வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு காவல்துறைக்கும் அவரது மகனுக்கும் செய்தி கூறி இருக்கிறார் உடன் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல் துறையினர் திருட்டு நடந்த இடத்தை ஆய்வு செய்து, தடய இயல் நிபுனர்களை கொண்டு ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

What do you think?

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா

‘மாஸ்க்’ படம் பாத்தீங்களா? செம அரசியல் த்ரில்லர் விருந்து!