in

“பூட்டிய அறைக்குள் 20 நிமிடம்!” நீதிபதி முன் கதறிய நடிகை ரம்யா! வாக்கு மூலம்!”


Watch – YouTube Click

“பூட்டிய அறைக்குள் 20 நிமிடம்!” நீதிபதி முன் கதறிய நடிகை ரம்யா! வாக்கு மூலம்!”

 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யுமான ரம்யா (என்கிற திவ்யா ஸ்பந்தனா), இப்போ ஒரு சீரியஸான சட்டப் போராட்டத்துல இறங்கியிருக்காங்க.

கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷன் பற்றி ரம்யா கருத்து சொன்னதுக்காக, தர்ஷன் ரசிகர்கள் அவருக்குக் கொடுத்த டார்ச்சர் தான் இப்போ பெங்களூருல ஹாட் டாபிக்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது குறித்து ரம்யா ஒரு போஸ்ட் போட்டிருந்தாரு. இதனால காண்டான தர்ஷன் ரசிகர்கள், ரம்யாவோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல வந்து ரொம்பக் கேவலமான வார்த்தைகள்லயும், பாலியல் பலாத்காரம் செஞ்சிடுவோம்னு மிரட்டலும் விடுத்திருக்காங்க.

சும்மா விடாத ரம்யா, பெங்களூரு கமிஷனர்கிட்ட புகார் கொடுக்க, சைபர் கிரைம் போலீஸ் அதிரடியா இறங்கி 12 ரசிகர்களைத் தூக்குனாங்க.இந்த வழக்கு இப்போ பெங்களூரு கோர்ட்டுக்கு வந்திருக்கு. இதுல முதல் சாட்சியே ரம்யா தான். நேத்து கோர்ட்டுக்கு வந்த ரம்யா, நீதிபதி முன்னாடி வாக்குமூலம் கொடுத்தாரு.

அவர் சொல்லப்போற விஷயங்கள் ரொம்பத் தனிப்பட்டது அப்படிங்கிறதால, கோர்ட் அறையை வெளிப்பக்கமா பூட்டிட்டு, நீதிபதி மற்றும் வக்கீல்கள் முன்னாடி மட்டும் ரம்யா பேசினாரு.

சுமார் 20 நிமிஷம் நடந்த இந்த விசாரணையில, தனக்கு வந்த அந்த ஆபாச மெசேஜ்கள் மற்றும் மிரட்டல்கள் பத்தி ரம்யா விலாவாரியா விளக்கிச் சொல்லியிருக்காரு.

இது எல்லாமே வீடியோவிலும் ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கு. வாக்குமூலத்தை முடிச்சுட்டு ரம்யா ரொம்பவே அமைதியா கோர்ட்ல இருந்து கிளம்பிப் போயிருக்காரு.


Watch – YouTube Click Shorts

What do you think?

Online Blackjack in Nebraska: A Fresh Take on Classic Gaming

ஹன்சிகா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!