in

14 தமிழக மீனவர்கள் சற்று முன் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர்..

14 தமிழக மீனவர்கள் சற்று முன் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர்..

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டியபோது பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 14 படகுகளின் உரிமையாளர்கள் தங்கள் படகுகளை பார்வையிட கடல் வழியாக சற்று முன்னர் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய குற்றத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு 89 படகுகள் அரச உமையாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது. எஞ்சிய படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் 14 பேரும் இன்றைய தினம் தனியான படகில் யாழ்ப்பாணம் வருகை தந்து தமது படகுகளை பார்வையிடுவதற்காக புறப்பட்டனர்.

இராமேஸ்வரம் பகுதியில் இருந்து வருகை தரும் விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள. படகுகள் திருத்தம் செய்யும் நிலையில் உள்ளதா அல்லது கட்டி இழுத்துச் செல்ல முடியுமா என்பது தொடர்பில் பரிசீலிக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் வருகை தரும் தமிழக மீனவர்கள் இன்றும் நாளையும் தங்கியிருந்து படகுகளைப் பரிசீலித்து நாளை மீண்டும் இராமேஸ்வரம் திரும்பி நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 14 படகுகளில் நல்ல நிலையில் உள்ள படகுகளை தமிழகம் எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

What do you think?

தே.மு.தி.க .நிறுவன தலைவர் விஜய்காந்த் பிறந்த நாளன்று நலத்திட்ட உதவிகள்

போலீசார் நடத்திய கூட்டத்தில் இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டு