அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் சோமவார 108 சங்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல் மோகனூர் காவிரிக்கரை மீது உள்ள அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் கார்திகை மாத 3-ம் சோமவார தினத்தை முன்னிட்டு 108 சங்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர்சிவ ஆலயத்தில் கார்திகைமாத 3-ம் சோமவார திங்கள் தினத்தை முன்னிட்டு இன்று 63 நாயன்மார்கள்மண்டபத்தில் 108 சங்குகள் அடுக்கப்பட்டு பின்னர் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகள் அமைக்கப்பட்டு பூர்ணாகதி நிறைவுற்றதும்மூலவர் அசலதீபேஸ்வரர், பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் திருமஞ்சனம் பச்சரிசி மாவு கரைசல் மஞ்சள் சந்தனம் வீபூதி கலச தீர்த்தம் 108 சங்கு என பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளாமான பகதர்கள் தரிசணம் பெற்று சென்றனர்.


