in

கனமழையால் துண்டிக்கப்பட்ட சாலை தனித்தீவாக மாறிய கிராமம்

கனமழையால் துண்டிக்கப்பட்ட சாலை தனித்தீவாக மாறிய கிராமம்

நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி?

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம்,ஜவ்வாது மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கலசபாக்கம் வட்டத்தில் உள்ள சோழவரம் – பூவாம்பட்டு செல்லும் சாலையில் கோயில் மாதிமங்கலம்,பானம்பட்டு,ஈச்சம்பூண்டி,சோழவரம் உள்பட ஏழு ஏரிகள் உபரி நீர்வரத்து வாய்காலில்அடைப்பு ஏற்பட்டு சோழவரம் பூவம்பட்டு இடையிலான சாலையில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் சாலையின்மீது பெருக்கெடுத்து ஓடுவதால் பூவாம்பட்டு தனித்தீவாக மாறி உள்ளது.

பூவாம்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு சீரமைத்து தர வேண்டும் இப்பகுதியில் ஒரு சிறிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பூவாம்பட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

What do you think?

கோவை, அவிநாசி சாலை உயர் மட்ட மேம்பாலம் முழுவதும் மாநில அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள 9 கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு ஒளிரூட்டல் பணி