பல லட்சம் பதிப்பிளான பதப்படுத்தப்பட்ட கடல் குதிரை பறிமுதல் கடத்தியவர் காருடன் கைது
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இரவு தொண்டி அருகே உள்ள சோலியக்குடி பஸ் ஸ்டாப் பகுதியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரைச் சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 9 கிலோ உலர்த்தப்பட்ட கடல் குதிரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக காரை ஓட்டி வந்த தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த யாசர் அராபத் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மருத்துவப் பயன்பாட்டிற்காக இவை கடத்தப்பட்டதாகத் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது


