தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் சட்டமன்றத் தொகுதியில் வைத்து வழிபட்டு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருத்தலமாகும்.
இத்திருகோவிலில் மாதங்கள் தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு ஷேச சயன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அச்சமயம் திடீரென்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலுடன் கோவிலுக்குள் உள்ளே நுழைந்து ஊஞ்சல் மண்டபத்தில் மீது ஏறி அங்காளம்மன் இடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து தரிசனம் செய்த பின்னர் பேய் மேடையில் அமர்ந்து சிறிது நேரம் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரை புகைப்படம் எடுக்க சூழ்ந்து கொண்டனர்.
மேலும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் மேடை வாசல் கேட்டில் கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளில் சிக்கித் தவித்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கட்சியினர் அழைத்துச் அழைத்து சென்றனர்.

