in

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா

 

ஏர்வாடி தர்கா அல்குத்புல் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் இன்று அதிகாலை 851ம் ஆண்டு சந்தனக்கூடு விழா நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் அல்குத்புல் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது . தர்காவில் 851ம் ஆண்டிற்கான உரூஸ் நல்லிணக்க சந்தனக்கூடு விழா ஏப். 29. அன்று மவுலீதுடன் துவங்கியது. மே 9ம் தேதி ஏர்வாடியில் இருந்து மேளதாளங்கள் முழங்க கொடி ஊர்வலம் வந்தது. தர்காவை வந்தடைந்த பின் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு முஜாகிது நல்ல இபுராகிம் தைக்காவில் இருந்து ஊர்வலமாக இன்று அதிகாலை புறப்பட்டு மேள தாளங்களுடன் தர்காவை வந்தடைந்தது. பின்னர் பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டது.

விழாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். மே 28 மாலை 5 மணியளவில் மவுலீது ஓதி, நெய்ச்சோறு (தப்ரூக்) வழங்கப்பட்டு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

சந்தனக்கூடு திருவிழாவையொட்டி மே 22ல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர். கீழக்கரை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.

What do you think?

சினிமா செய்திகள்

ஆத்தூர்  ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் 57-ஆம் ஆண்டு திருவிழா பூக்குழி வழிபாடு