ஆசாட நவராத்திரி வராகி அம்மனுக்கு இரண்டாம் நாள் மஞ்சள் அலங்காரம்
ஆசாட நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான இன்று வராகி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம். பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆசாட நவராத்திரி திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு ஆசாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் வராகி அம்மனுக்கு நடைபெறும். இதேபோல் முதல் நாளான நேற்று பல்வேறு இனிப்பு வகைகளால் அலங்காரம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று வராகி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.


