in

ராமேஸ்வரத்தில் ஆட்டோ ஓட்டுனர் வாங்கிய பிரியாணியில் புழு

ராமேஸ்வரத்தில் ஆட்டோ ஓட்டுனர் வாங்கிய பிரியாணியில் புழு

பிரியாணி கடையை பூட்டி சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

ராமேஸ்வரம் அருகே பட்டதாரி பிரியாணி கடையில் ஆட்டோ ஓட்டுநர் வாங்கிய பிரியாணியில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுனர். பிரியாணியில் புழு கிடந்தது குறித்து கேட்டதற்கு கடை ஊழியர்கள் உரிய பதிலளிக்காததால் ஆட்டோ ஓட்டுனர் பிரியாணி கடை மூடி சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மெய்யம்புலி, தங்கச்சிமடம், வர்த்தக தெரு உள்ளிட்ட பகுதிகளில் பட்டதாரி என்ற பெயரில் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் சிவராத்திரி ஒட்டி குலதெய்வ சாமி கும்பிட சென்று விட்டு மதியம் ராமேஸ்வரம் வந்துள்ளார்.

அப்போது நடுவழியில் கண்ணன் குடும்பத்தினர் சாப்பிடுவதற்காக மெய்யம்புலி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டதாரி பிரியாணி கடையில் சிக்கன் 65 பிரியாணி வாங்கி உள்ளனர்.

பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரது மூன்று வயது குழந்தை மற்றும் மனைவி ஆகியோர் பிரியாணியில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கடைக்குச் சென்று உரிமையாளர் எங்கே என கேட்டதற்கு கடையின் ஊழியர்கள் உரிமையாளர் செல்போன் என்னை தர மறுத்ததால் கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கெட்டுப்போன பிரியாணியை இனி யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது என எச்சரித்து பட்டதாரி பிரியாணி கடையை பூட்டி சாவி எடுத்துக்கொண்டு தங்கச்சிமடம் காவல் நிலையம் சென்றனர்.

பின்னர் காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் பட்டதாரி பிரியாணி கடை உரிமையாளர்களை வரவழைத்து கடையின் சாவியை கொடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்யும் வரை கடையை திறக்க கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

பிரியாணி சாப்பிட்ட கண்ணனின் மனைவி மற்றும் அவரது மூன்று வயது மகனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

பட்டதாரி பிரியாணி கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உணவு  பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆறு கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What do you think?

ஆர்.எஸ். மங்கலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்:  பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

மனு அளித்து பதிவு செய்த 21 நாட்களிலேயே பேட்டரி வீல் சேர் வழங்கியதால் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்