ஜனநாயகன் படம் வெளிவர வேண்டி 69 பொங்கல் பானையில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை (09.01.26) வெளியிடப்படப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக நாளை ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு இல்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது. இது விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க கட்சியினர் இடையே பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இதன் காரணமாக விஜயின் 69வது படமான ஜனநாயகன் படம் எந்த தடையும் இன்றி வெளிவர வேண்டி திண்டுக்கல் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் அடியனூத்து ஊராட்சி, நல்லாம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் 69 பொங்கல் பானையில் பெண்கள் பொங்கல் வைத்து கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.


இது குறித்து திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கூறும் போது,இந்த பொங்கல் விழா த.வெ.க தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் தங்கு தடையின்றி வெளிவர வேண்டியும், த.வெ.க சார்பில் நடத்தப்படும் பொங்கல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
மேலும், ஜனநாயகன் திரைப்படம் வெளியிடபடாததற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்” என தெரிவித்தார்.


