in

சொன்ன தேதிக்கு படம் ரிலீஸ் ஆகுமா  ரசிகர்கள் ஆவல் !!!!


Watch – YouTube Click

சொன்ன தேதிக்கு படம் ரிலீஸ் ஆகுமா  ரசிகர்கள் ஆவல் !!!!

 

சதுரங்க வேட்டை’, ‘தீரன்’னு தரமான ஹிட் கொடுத்த எச்.வினோத் இயக்கத்துல, நம்ம விஜய் நடிச்சிருக்கிற ‘ஜனநாயகன்’ வர்ற 9-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலா ரிலீஸ் ஆகணும்.

எடிட்டிங் வரைக்கும் எல்லா வேலையும் முடிஞ்சாலும், இப்போ ஒரு பெரிய சிக்கல்ல படம் மாட்டிட்டு இருக்கு. கடந்த மாசமே படத்தை தணிக்கைக்கு அனுப்பினாலும், இப்போ வரைக்கும் சென்சார் சர்டிபிகேட் கிடைக்கவே இல்லையாம்.

படம் ரிலீஸ்க்கு இன்னும் 72 மணி நேரம் கூட இல்லாத நிலைமையில, இந்த இழுபறி படக்குழுவை ரொம்பவே கவலையில ஆழ்த்தியிருக்கு.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள்ல புக்கிங் ஓப்பனாகியும் ரசிகர்கள் ஆர்வமா டிக்கெட் எடுத்துட்டு இருக்காங்க. ஆனா சென்னையில இன்னும் முதல் நாள் காட்சிக்கான முன்பதிவு தொடங்கவே இல்லை.

சர்டிபிகேட் வந்தா தான் புக்கிங் ஓப்பன் பண்ண முடியும்ங்கிறதுனால தியேட்டர் உரிமையாளர்களும் வெயிட்டிங்ல இருக்காங்க.

விஜய்க்கு ஜோடியா பூஜா ஹெக்டே, முக்கிய ரோல்ல மமிதா பைஜூ, அப்புறம் பாபி தியோல், பிரியாமணி, கௌதம் மேனன்னு ஒரு பெரிய கூட்டமே நடிச்சிருக்காங்க.

அனிருத் மியூசிக்ல பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலைமையில, இந்த சென்சார் பஞ்சாயத்து ரசிகர்களை செம காண்டுல வச்சிருக்கு.

கடைசி நேரத்துல சர்டிபிகேட் கிடைச்சு, சொன்ன தேதியில தளபதி படம் ஸ்கிரீன்ல வருமான்னு தான் இப்போ மொத்தத் திரையுலகமும் பாத்துட்டு இருக்கு!

What do you think?

 ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பொதுமக்கள் கைது.