in

ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சாட்டியகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிடங்களூர் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள தரைமட்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனால் கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூர் – திருக்குவளை – கச்சனம் இணைப்பு பிரதான சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலிவலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் விநியோகத்தை விரைவில் சீரமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.

இதனால் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

What do you think?

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.

பேயை விட ஏஐ (AI) தான் இப்போ பயங்கரம்!” சந்தானத்தின் சைபர் கிரைம் விழிப்புணர்வு! வைரல் வீடியோ.