விஜயோட மகன் ஜேசன் சஞ்சய் புதுசா ஒரு ட்விஸ்ட்
தமிழ் சினிமாவோட உச்ச நட்சத்திரமா இருக்குற விஜய், இப்போ அரசியல்லயும் கால் பதிச்சு ‘தவெக’ தலைவரா பிஸியா இருக்காரு.
ஒரு பக்கம் கட்சி வேலைகள் போயிட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் அவரோட குடும்ப வாழ்க்கையைச் சுத்தி வர்ற செய்திகள் தான் இப்போ சோசியல் மீடியாவுல ரணகளமா ஓடிக்கிட்டு இருக்கு.
விஜயும் சங்கீதாவும் கடந்த சில வருஷங்களாவே பிரிஞ்சு வாழ்றதா சொல்லப்பட்டு வந்த நிலையில, கடந்த மாசம் 27-ஆம் தேதி சங்கீதா கோர்ட்டுல விவாகரத்து மனு கொடுத்ததா ஒரு செய்தி வெளியாகி ஷாக் கொடுத்தது.
இதுக்கிடையில, சென்னையில நடந்த ஒரு கல்யாணத்துக்கு விஜய் – த்ரிஷா ரெண்டு பேரும் ஒண்ணா போன போட்டோஸ் வைரலாகி, எரியுற நெருப்புல எண்ணெயை ஊத்துன மாதிரி ஆகிடுச்சு.
இப்போ இந்த விவகாரத்துல புதுசா ஒரு ட்விஸ்ட் என்னன்னா, விஜயோட மகன் ஜேசன் சஞ்சய். வழக்கமா பெரிய ஹீரோக்களோட பசங்க ஹீரோவா தான் வருவாங்க, ஆனா சஞ்சய் இப்போ டைரக்டரா அவரோட முதல் படத்தை எடுத்துட்டு இருக்காரு.
படம் ரிலீஸாகுற நேரத்துல, சஞ்சய் பண்ண சில விஷயங்கள் இப்போ பெரிய விவாதமா மாறியிருக்கு சினிமாவுல இருக்குற மத்த வாரிசுகள் எல்லாம் அவங்க அப்பா பேரோட முதல் எழுத்தை (Initial) பின்னாடி போட்டுக்குறது தான் வழக்கம். ஆனா, சஞ்சய் இப்போ அவரோட முதல் படத்தோட டைட்டில் கார்டுலயும், கையெழுத்துலயும் “Jason Sanjay S” அப்படின்னு போடுறாராம்.
இதுல இருக்குற “S” அப்படிங்கிற எழுத்து அவரோட அம்மா சங்கீதா சோர்ணலிங்கத்தை தான் குறிக்குதுன்னு ஒரு தகவல் தீயா பரவிட்டு இருக்கு.
அதுமட்டும் இல்லாம, சஞ்சய் தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல அப்பா விஜயை அன்ஃபாலோ (Unfollow) பண்ணிட்டதாவும் ரசிகர்கள் கண்டுபிடிச்சு சொல்லிட்டு இருக்காங்க.
அம்மாவோட விவாகரத்து முடிவுக்கு சப்போர்ட் பண்ண தான் சஞ்சய் இப்படி பண்றாரா? இல்ல இது வெறும் வதந்தியா? அப்படிங்கிற கேள்வி இப்போ கோலிவுட் முழுக்க எதிரொலிக்குது!
