Vijay Sethupathi is back in Full Form…. தலைவன் தலைவி … Movie Review
நம் சமூகத்தில் திருமணம் என்பது தம்பதியரைப் மட்டும் சார்ந்தது அல்ல. இருகுடும்பங்கள் மற்றும் சமூகத்தை சார்ந்தது.
திருமணம் என்பது வெறும் ஒப்பந்தம் அல்ல; காதல் என்பது திசைகாட்டி, புரிதல் என்பது வரைபடம், நம்பிக்கை என்பது வழிகாட்டும் நட்சத்திரம்.. சமநிலையோடு குடும்பத்தை நிர்வகிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
ஆகாசவீரனாக விஜய் சேதுபதி பேரரசியாக நித்யா மேனன், நடித்த தலைவன் தலைவி அதிர்ஷ்டசாலிகளா? என்று பார்போம்.
குடும்பத்தை மையமாகக் கொண்ட பொழுதுபோக்குப் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ், மீண்டும் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப கதையை கையில் எடுத்திருக்கிறார்.
தனது சொந்த கிராமத்தில் ஒரு சாதாரண உணவகத்தை நடத்தும் பரோட்டா மாஸ்டரான ஆகாச வீரனாக விஜய் சேதுபதி. திருமணத்திற்கு பெண் பார்க்க (நித்யா மேனன்) வீட்டிற்கு செல்கின்றார், இருவருக்கும் பிடித்து போக திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது விஜய் சேதுபதி குடும்பம் அடிதடி குடும்பம் என்று தெரிய வர செம்பன் வினோத் (மேனனின் தந்தை மற்றும் ஆர்.கே. சுரேஷ் (மேனனின் சகோதர் திருமணத்தை நிறுத்த நினைக்க குடும்பதை எதிர்த்து பேரரசி, ஆகாச வீரனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்.
காதலுடன் ஆரம்பித்த இவர்களின் வாழ்க்கை வீரனின் தாய் (தீபா) மற்றும் சகோதரி (ரோஷினி) ஆகியோரின் தலையீடு காரணமாக, போர்கல மாக மாறிவிடுகிறது..
இந்த மோதல்கள், தீவிரமடைந்து, பேரரசி இறுதியில் வீரனிடமிருந்து பிரிந்து, செல்கிறார். விவாகரத்து வரை சென்ற தலைவன் தலைவி இறுதியில் சேர்ந்தார்களா??? என்பதே மீதி கதை.
பாண்டியராஜ் படத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்று நமக்கே தெரியும். சண்ட போடுறாங்க சேர்ந்துகுராங்க, சண்ட போடுறாங்க சேர்ந்துகுராங்க, படம் முடியரவரைக்கும் இதான் நடக்குது. சண்ட போடுறேன்..னு விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் காட்டு கத்தல் கத்துறாங்க… வாங்குன சம்பளத்தை விட அதிகமாவே கத்துறாங்க.
அப்பாவியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், சில சமயங்களில் கோபக்கார கணவராக விஜய் சேதுபதி நடிப்பு அருமை (கத்துரத கொஞ்சம் கொறச்சி இருக்கலாம்) .. நித்யா மேனனுக்கு மாறுபட்ட கதாபாதிரமனாலும் நேர்த்தியாகவும் துடிப்புடன் உணர்ச்சிகரமாக விஜய் சேதுபதி..யையே நடிப்பில் Over டேக் செய்து நடித்திருக்கிறார்..
நாயகன் பரோட்டா கடை வைத்திருப்பதால் படமும் Spice..சியா இருக்கும்..Low Budget படம் என்றதாலையோ என்னவோ பரோட்டா கடை, கோவில், வீடு… இன்னு மூன்று இடத்தை மட்டுமே காட்டி சலிப்பை ஏற்படுத்திவிட்டார் இயக்குனர்.
யோகி பாபு தனது காமெடி..யால் வீட்டையே மகிழ்விக்கிறார்! செம்பன் வினோத், தீபா, ஆர்.கே. சுரேஷ், காளி வெங்கட் & ரோஷினி ஆகியோர் சிறப்பாக நடித்திருகின்றனர்.
சுகுமாரின் ஒளிப்பதிவு, பிரதீப்பின் எடிட்டிங் & சந்தோஷ் நாராயணனின் இசையுடன், அருமை.
தலைவன் தலைவி ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம், திருமணம் இரண்டு நபர்களுக்கு இடையேயானதாக இருந்தாலும், அது பெரும்பாலும் அவர்களைச் சுற்றியுள்ள நபர்களை எப்படி சோதிக்கிறது என்ற கருத்தை வலுப்படுத்துகிறார் எதற்கெடுத்தாலும் சண்டை கோர்ட் என்று செல்லும் இன்றைய தம்பதிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.


