in

விஜய்..இக்கு தெரியணும்…தான் இந்த பதிவு

விஜய்..இக்கு தெரியணும்…தான் இந்த பதிவு

 

நடிகை சனம் செட்டி (Shanamshetty) அம்புலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கதம் கதம், தகடு, உள்ளிட்ட படங்களின் நடித்திருந்தார்.

இவர் பிக் பாஸ் தர்ஷன் தன்னை காதல் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக போலீசில் பரபரப்பு புகார் அளித்தவர்.

தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் இருக்கும் சனம் செட்டி வாய்ப்பு காத்திருக்கும் நிலையில் ஜனநாயகன் படத்தில் வாய்ப்பு கேட்டு அலைந்ததாகவும் தனக்கு எந்த பதிலும் கூறாமல் அலைக்கழித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தான் ஒரு மார்க்கெட்டில் இல்லாத நடிகை என்பதால் தன்னை இப்படி அலைக்கழிக்கிறார்கள் என்று கூறியவர் இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜனநாயகன் படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதில் நடிக்க நான் ஆசைப்பட்டேன் ஆறு மாத காலமாக அப்படத்தின் உதவி இயக்குனர் மூலமாக முயற்சி செய்து முடிக்கிறேன்.

ஆனால் என்னை அலைய விடுகிறார்கள் எந்த பதிலும் இதுவரை கூறவில்லை. முடியாது என்று சொல்வதற்கு இத்தனை மாதங்களா அப்படத்தின் டைரக்டர் என்ன விண்வெளியிளா இருக்கிறார்.

நான் 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன் மார்க்கெட் உள்ள நடிகைகளுக்கு மட்டும் தான் வாய்ப்பு தருகிறார்கள் மார்க்கெட்டு இல்லாத நடிகைகளை ஏன் இப்படி அலை கழிக்கிறார்கள் இந்த பாரபட்சம் தான் எனக்கு பிடிக்கவில்லை விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த பதிவை நான் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

அணில் போல தாவும் விஜய்..இக்கு கைதட்டுங்க…. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

பாண்டியன் ஸ்டோர் நடிகர் கொடுத்த குட் News