ஆன்லைன் சூதாட்ட வழக்கில் அமலாக்கத்துறையில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்த விஜய் தேவரகொண்டா
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தி இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாகவும் நிதி இழப்பீடு ஏற்படுத்தியதற்தாகவும் தொழிலதிபர் PM Phanindra Sarma தெலுங்கானா போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் 29 பிரபலங்கள் மீது FIR போடப்பட்ட தன் விளைவாக அமலாக்க துறையிலிருந்து நடிகர்களுக்கு சம்மன் அனுப்பட்டது.
பிரகாஷ்ராஜ் விஜய் தேவரகொண்டா, ராணா, நிதி அகர்வால், மஞ்சு லக்ஷ்மி, பிரணிதா சுபாஷ், அனன்யா உள்ளிட்டோர் மீது கோடிக்கணக்கான பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ய உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார். விசாரனைக்கு பிறகு மீடியாவை சந்தித்த நடிகர் விஜய் தேவரகொண்டா, ED விஷயங்களை தெளிவுபடுத்த என்னை அழைத்தார்கள். நான் A23 என்ற கேமிங் செயலியை ஆதரித்தேன்.
இது எந்த வகையிலும் பந்தய செயலிகளுடன் தொடர்புடையது அல்ல. கேமிங் செயலிகள் முற்றிலும் சட்டபூர்வமானவை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவை, வணிக உரிமம் பெற்றவை, மேலும் GST மற்றும் TDS…சும் இருக்கிறது என்று கூறினார். நடிகர் தேவர் கொண்டா வாக்குமூலத்தை வைத்து அவரது ஆவணங்களுடன் ஒப்பிட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .
ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜ் அமலாக்க துறையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர் சட்டம் அதன் கடமையை செய்கிறது ஒரு குடிமகனாக எனது ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கூறினார். மஞ்சு லக்ஷ்மியும் வருகின்ற 13-ஆம் தேதி ஆஜர் ஆவதாக தெரிவித்துள்ளார்.


