இயக்குனருக்கு சில அட்வைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி
பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனியை வைத்து எடிட்டர் லியோ ஜான்பால் “மார்கன்” என்ற படத்தை இயக்குகிறார். இவர்களுடன் சமுத்திரகனி, மகாநதி சங்கர், பிரித்திகா வினோத் சாகர் உள்ளிட்டோ நடிக்கின்றனர்.
நேற்று சென்னையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி இயக்குனருக்கு சில அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் சசி டிஷ்யூம் படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் 15 ஆண்டுகாலம் கழித்து பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகனாக என்னை அறிமுகப்படுத்தினார்.
நான் படம் தயாரிப்பதை பார்த்து என்னிடம் அதிகம் பணம் இருப்பதாக நினைக்கிறார்கள் நான் வாங்கும் கடனுக்கு மாதம் மாதம் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன்.
இயக்குனர் லியோ ஜான் பால் திறமையான எடிட்டர் நான் செய்த தவறை அவர் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
நான் நடிக்க வந்த பிறகு இசையமைப்பதை நிறுத்தி விட்டேன் அவரும் இந்த தவறை செய்யக்கூடாது தொடர்ந்து எடிட்டிங் செய்து கொண்டே இருக்க வேண்டும் அவரின் பேட்டியை தொடர்ந்து மார்கன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமான மார்கன் ஜூன் 27ஆம் தேதி வெளியாகிறது.


