in

நடிகர் மதன் பாபு ..விற்கு அஞ்சலி செலுத்த வராத மூத்த நடிகர்கள்

நடிகர் மதன் பாபு ..விற்கு அஞ்சலி செலுத்த வராத மூத்த நடிகர்கள்


Watch – YouTube Click

தனது தனித்துவமான சிரிப்பு மற்றும் வேடிக்கையான முகபாவங்கள் மூலம் திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மதன் பாபு (Mathan Babu) August 2..ஆம் தேதி சனிக்கிழமை உடல்நலக் குறைபாடுகள் காரணமாக காலமானார் என்று அவரது குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அவருக்கு வயது 71. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சனிக்கிழமை மாலை அடையாறு வீட்டில் காலமானார்.

மதன் பாப் என்று சினிமாவில் அழைக்கபட்ட எஸ். கிருஷ்ணமூர்த்தி, தனது குடும்பத்தில் எட்டாவது குழந்தை. கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், சூர்யா மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

சினிமாவில் மட்டுமல்ல சன் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியான “அசத்த போவது யாரு?” இல் நடுவர்களில் ஒருவராக தோன்றினார்.

அவர் பல்துறை நடிகர் மற்றும் இசைக்கலைஞர். அவர் எந்த வேடத்தில் நடித்தாலும், அவரது நடிப்புத் திறமை ரசிகர்களை சிரிக்க வைத்து விடும். இப்படி பட்ட நடிகரின் இறுதி சடங்கில் மூத்த நடிகர்கள் பலர் கலந்து கொள்ளாதது வருத்தத்தை அளிப்பதாக ஆதங்க பட்டு அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர் இறந்த வேதனையை விட அவருக்கு அஞ்சலி செலுத்த வராமல் வீடு வெறிச்சோடி இருந்ததை காணும் போது அதிக வேதனையாக இருந்ததாக குடும்பத்தினர் தெவித்தனர்.

வெகு சீக்கிரம் மறந்து விட்ட மனிதர்களை நினைக்கும் போது இந்த வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர்கள் மனதில் நிற்கும் வரை…..

What do you think?

குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொடிமரம் நடும் விழா