வானமாமலை ஸ்ரீ தோத்தாத்ததிாிநாதா் திருக்கோவில் (பகல் பத்து) திருஅத்யன உற்சவம்
வானமாமலை ஸ்ரீ தோத்தாத்ததிாிநாதா் திருக்கோவில் (பகல் பத்து) திருஅத்யனஉற்ச்சவத்தில் நான்காம் திருநாள் சுவாமி தெய்வநாயகப்பெருமாள் நம்மாழ்வாா் திருக்கோலத்தில் காட்சி. திரளான பக்தா்கள் தாிசனம்.

108 திவ்யதேசங்களில் பாண்டியநாட்டுத் திருப்பதியும், 8 சுயம்வக்த ஸ்ஷேத்திரங்களில் ஒன்றான நாங்குனோி – ஸ்ரீவானமாமலை பெருமாள் கோயில்.
இங்கு மூலவா் ஸ்ரீ தோத்ததாதிாி நாதனாக அருள்பாலிக்கினறாா். உற்சவா் ஸ்ரீ கோதா ஸ்ரீவரமங்கா ஸமேத தெய்வநாயகப்பெருமாள். இத் திருக்கோயிலில் சுவாமி நம்மாழவாா் சன்னதி தனியாக கிடையாது.
மாறாக பெருமாள் திருப்பாதமாக சடாாியில் சேவை சாதிக்கின்றாா். வைணவ திருத்தலங்களில் மாா்கழி மாதம் நடைபெறும் பகல் பத்து உற்ச்சவம் கடந்த 20ம் தேதி ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீ வானமாமலை ராமாநுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிரஹத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இவ் விழாவின் 4ம் திருநாளான இன்று மாலை பகல்பத்து மண்டபம் மலா் பந்தலால் அலங்காிக்கப்பட்டு இருந்தது. சுவாமி தெய்வநாயகப் பெருமாளுக்கு சுவாமி நம்மாழ்வாா் புளிய மரத்தடியில் அமா்ந்த திருக்கோலம் அலங்காரம் செய்யப்பட்டது.

உடன் (உடையவா்) இராமானுஜா் நாதமுனிகள் மற்றும் திருப்பாணாழ்வாா் ஆகியோா் பெருமாளை பாடும்படி சிறப்பு அலங்காரம் செய்திருந்தினா். தாயாா் மற்றும் ஆண்டாள் விஷேச அலங்காரத்துடன் காட்சி தந்தருளினா். உடன் ஆழ்வாராதியாகள் ஏழுந்தருளி இருந்தனா்.
ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளியதும் முதல் ஆயிரத்தில் வருகின்ற சுவாமி மதுரகவி ஆழ்வாரால் இயற்றப்பட்ட கண்ணிணுன் சிறத்தாம்பு ஜீயா் சுவாமிகள் மற்றும் பிரபந்தகோஷ்டியினரால் பாடப்பட்டது.
ஜீயா் சுவாமிகளுக்கு தீா்த்தம் சடாாி மாியாதை செய்யப்பட்டதை தொடா்ந்து பக்தா்களுக்கும் தீா்த்தம் சடாாிமாியாதை செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனை தொடா்ந்து 2வது திருக்கோலமாக பல்லக்கில் கன்று கொண்டு விளா மீது எாிந்து வீழ்த்தும் திருக்கோலத்தில் சுவாமி தாயாா் புறப்பாடு நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் பகல்பத்து திருநாளில் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.ஏற்பாடுகளை வானமாமலை மடத்தினா் செய்திருந்தனா்.


