இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.
சாலையை கடக்க முற்பட்ட பொழுது இருசக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி கேமரா காட்சி
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் சாலையை கடக்க முற்பட்ட இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது .
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொரு இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி பகுதியை சார்ந்த சந்தோஷ் (20) மற்றும் நெஸஃபல் அலி (18) இருவரும் இரு சக்கர வாகனத்தில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது விருத்தாச்சலம் சாலையில் இருந்து இருசக்கர ஜக்கிரியா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வடலூர் சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி தூக்கி வீசப்படும். சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சந்தோஷ் என்பவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பின்னால் அமர்ந்து வந்த நௌஃபல் அலி என்ற இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் அதேபோல சாலையைக் கடக்க முற்பட்ட ஜக்கிரியா 62 என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து மந்தாரக்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையைக் கடக்க முற்பட்ட பொழுது இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

