உடல்வலி நிவாரணி போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது.
கோயம்பேட்டில் உடல்வழி நிவாரணி போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது – 700 மாத்திரைகள் பறிமுதல்.மும்பையில் இருந்து ரயில் மூலம் வாங்கி வந்து சென்னையில் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கோயம்பேடு இரும்பு கம்பெனி அருகே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே இருவரையும் சோதனை செய்த போலீசார் அவர்களிடம் இருந்த உடல் வலி நிவாரணி போதை மாத்திரைகள் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர்கள் சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஹரி ஹரசுதன்(25) வீரச்செல்வன்(21) என தெரியவந்தது.

மேலும், இவர்கள் மும்பையில் இருந்து ரயில் மூலம் உடல் வழி நிவாரணி போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 700 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


