in

சர்வதேச அழகிப் போட்டி மூன்றாம் இடத்தை பிடித்து நாகூரை சேர்ந்த திருநங்கை சாதனை

சர்வதேச அழகிப் போட்டி மூன்றாம் இடத்தை பிடித்து நாகூரை சேர்ந்த திருநங்கை சாதனை

 

கம்போடியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டி உலகளவில் மூன்றாம் இடத்தை பிடித்து நாகூரை சேர்ந்த திருநங்கை சாதனை

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரை அடுத்த வடக்கு பால் பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ரஃபியா. சிறு வயதிலேயே திருநங்கையாக மாறிய இவர், திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சாதிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அழகு கலையில் ஆர்வம் கொண்ட அவர், பெங்களூரில் அழகுக் கலை நிபுணர் படிப்பை எட்டு மாதங்கள் படித்து, அந்த துறையிலேயே பயணிக்க தொடங்கி உள்ளார்.

தொடர்ந்து, அழகு நிலையத்தில் மாத ஊதியத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்துகொண்டே பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று சாதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அதன்படி கம்போடியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியான மிஸ் மேஜஸ்டிக் தளத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரஃபியா உலகளவில் மூன்றாம் இடத்தை பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் மத்தியில் மொத்தம் 30 போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் முதலிடத்தையும், கம்போடியா இரண்டாம் இடத்தையும் பெற்ற நிலையில், இந்தியா சார்பில் ரஃபியாவின் சாதனை அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.

இந்தியாவிற்கு திரும்பியதும் நாகையில் ரஃபியாவுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. சமூக நலத்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.

“உலக அளவிலான போட்டியில் இந்தியா சார்பில் மூன்றாம் இடம் பெற்றது எனக்கு பெரும் பெருமை. குடும்பம், நண்பர்கள் மற்றும் திருநங்கை சகோதரிகள் அளித்த ஆதரவுதான் எனக்கு துணை. என் சமூகத்திலிருந்து மேலும் பலர் உலக மேடையில் சாதிக்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார்.

உலக மேடையில் ரஃபியாவின் இச் சாதனை, இந்திய திருநங்கை சமூகத்திற்கு புதிய நம்பிக்கையும் உயர்ந்த இடத்தையும் சேர்த்துள்ளது.

What do you think?

டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளையவேந்தர் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம்

அவங்களுக்கு மனவலிமை ரொம்ப கம்மி  நடிகர் ஆனந்தராஜ் பேட்டி