கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் போக்குவரத்து காவல் உதவி காவல் ஆய்வாளர்
வீடியோ சமுக வலைதளங்களில் பரவல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் திண்டிவனம் அரசு கோவிந்தசாமி கலைக்கல்லூரி நாள்தோறும் அரசு பேருந்து மூலம் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி செல்லும் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி பேருந்துகளில் படியில் தொங்கியவாரும் இருசக்கர வாகனங்களில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் செய்வது தொடர் கதையாக இருந்து வந்த நிலையில்
செஞ்சி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி படியில் தொங்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்து மாணவர்களை பேருந்துக்குள் ஏற்றி பின்பு ஓட்டுனரிடம் பேருந்து கதவை மூட சொல்லி வலியுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
செஞ்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மாணவர்களிடம் அக்கறையுடன் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


