28
ஜனவரி
2026
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 28 தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்
27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.
மேஷம் (Aries)
மேஷ ராசி அன்பர்களே!
இன்று உங்கள் ராசிநாதன் செவ்வாயின் கிழமை என்பதால் புதிய காரியங்களில் வெற்றி கிட்டும். நிலுவையில் இருந்த சொத்து விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
அஸ்வினி : நம்பிக்கை பிறக்கும்
பரணி : வேறுபாடுகள் நீங்கும்.
கிருத்திகை : போட்டிகள் குறையும்
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசி அன்பர்களே!
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும்.
எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனிறம்
கிருத்திகை : லாபகரமான நாள்.
ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : வரவுகள் உண்டாகும்
மிதுனம் (Gemini)
மிதுன ராசி அன்பர்களே!
புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படவும்.
மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும்
திருவாதிரை :மாற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.
கடகம் (Cancer)
கடக ராசி அன்பர்களே!
எதிலும் புத்துணச்சியுடன் ஈடுபடுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் லாபம் மேம்படும்
கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : லாபம் மேம்படும்.
பூசம் : முயற்சிகள் கைகூடும்.
ஆயில்யம் : ஆர்வமின்மை விலகும்.
சிம்மம் (Leo)
சிம்மம் ராசி அன்பர்களே!
எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயரதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும்
அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மகம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூரம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
உத்திரம் : இழுபறி குறையும்.
கன்னி (Virgo)
கன்னி ராசி அன்பர்களே!
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த இலக்குகள் பிறக்கும்
பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். தனம் நிறைந்த நாள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்
அஸ்தம் : தெளிவுகள் பிறக்கும்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம் (Libra)
துலாம் ராசி அன்பர்களே!
குடும்ப பெரியவர்ளிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கிடைக்கும். எடுத்து செல்லும் உடமைகளில் கவனம்.
புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை :தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்
விருச்சிகம் (Scorpius)
விருச்சிகம் ராசி அன்பர்களே!
புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழுவீர்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைப்பட்டு வந்த சொத்து விற்பனை சாதகமாக முடியும்.
புதிய முயற்சிகளால் வியாபார சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்..
அனுஷம் : தன்னம்பிக்கை மேம்படும்
கேட்டை : ஆதரவான நாள்.
தனுசு (Sagittarius)
தனுசு ராசி அன்பர்களே!
பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும்.
புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் :மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் :தடைகள் நீங்கும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்
மகரம் (Capricorn)
மகர ராசி அன்பர்களே!
மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவு பெறும்.
உறவினர்களால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை நிறம்
உத்திராடம் : சோர்வுகள் குறையும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம் (Aquarius)
கும்ப ராசி அன்பர்களே!
அரசு செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வருவாய் நெருக்கடியால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இலக்குகளை முடிப்பதில் அலைச்சல் ஏற்படும்.
குறுகிய பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். வியாபார பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை :தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் :பச்சை நிறம்
அவிட்டம் : பொறுமை வேண்டும்.
சதயம் : அலைச்சல் ஏற்படும்.
பூரட்டாதி :செயல்பாடுகளில் கவனம்
மீனம் (Pisces)
மீன ராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும்.
கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
ரேவதி : மதிப்புகள் மேம்படும்.
பஞ்சாங்கம்
| நாள் | புதன்கிழமை |
|---|---|
| திதி | தசமி பகல் 2.36 வரை பிறகு ஏகாதசி |
| நட்சத்திரம் | கிருத்திகை காலை 7.42 வரை பிறகு ரோகிணி |
| யோகம் | அமிர்தயோகம் |
| ராகுகாலம் | பகல் 12 முதல் 1.30 வரை |
| எமகண்டம் | காலை 7.30 முதல் 9 வரை |
| நல்லநேரம் | காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை |
| சந்திராஷ்டமம் | சித்திரை காலை 7.42 வரை பிறகு சுவாதி |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |