திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் 2025 சிம்ம வாகனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சுவாமி வீதிஉலாவில் கர்நாடக, ஆந்திரா ராஜஸ்தான், ஜார்கண்ட் அசாம் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


