திண்டிவனம் வீடூர் கிராமம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய 3 ஆம் ஆண்டு மயான கொள்ளை விழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் கிராமம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய 3 ஆம் ஆண்டு மயான கொள்ளை விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு அபிஷேகமும்மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று மாலை மாலை அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ பாவாடைராயன், ஸ்ரீ வீரபத்திரன், குறத்தி வேடம் அணிந்து வள்ளாளன் கோட்டையை அழித்து மயானகொள்ளை விழா நடைபெற்றது.

தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் அம்மன் வேடமிட்டு கிராம வீதி வழியாக மயானம் சென்று கொள்ளையிடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


