in

அருள்திரு ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேர் விழா

அருள்திரு ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேர் விழா

 

வானூர் அடுத்த கிளியனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன், அருள்திரு ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன், அருள்திரு ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு கடந்த 9.5.2025 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது.

பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி அவர்கள் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

What do you think?

தாய்மாமன் சீர் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அசத்தல்

முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தியின் 34-ம் ஆண்டு நினைவு தினம்