in

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் 3-ம் நாள் – சேஷ வாகனம்

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் 3-ம் நாள் – சேஷ வாகனம்

 

 தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம்
மூன்றாம் நாள் ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் ராஜா அலங்காரத்தில்
சேஷ வாகனம் புறப்பாடு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் மூன்றாம் நாளை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளுக்கு மகாதீபாரதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோட ச உபச்சாரம் மற்றும் பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து சேஷ வாகனத்தில் பத்ர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் சேஷ வாகனத்தில் காட்சியளித்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் அவர்களுக்கு பஞ்சமுகத்தி பாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது.

What do you think?

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சுவாமி நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா

மாங்காய் 10 கிலோ 100 ரூபாய் என்று குறைவாக விற்பனை செய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி