ஜனநாயகன்’ ரிலீஸ்க்கு இப்போ ஒரு பெரிய முட்டுக்கட்டை
விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துட்டு இருந்த ‘ஜனநாயகன்’ ரிலீஸ்க்கு இப்போ ஒரு பெரிய முட்டுக்கட்டை விழுந்திருக்கு.
கோர்ட்ல நடந்த மதிய விசாரணையில நிலைமை தலைகீழா மாறிடுச்சு. காலையில தனி நீதிபதி “உடனே சர்டிபிகேட் குடுங்க“னு சொன்னாரு. ஆனா அதை எதிர்த்து சென்சார் போர்டு அப்பீல் பண்ணாங்க.
அதை விசாரிச்ச உயர் நீதிமன்ற அமர்வு இப்போ ஒரு அதிரடி உத்தரவு போட்டிருக்காங்க: “சென்சார் சர்டிபிகேட் கிடைக்கறதுக்கு முன்னாடியே ரிலீஸ் தேதியை அறிவிச்சுட்டு, கோர்ட்டுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது”னு நீதிபதிகள் அதிருப்தி தெரிவிச்சுட்டாங்க.
இந்த வழக்கைத் தள்ளி வச்சிருக்காங்க. இதனால, பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுறது வாய்ப்பே இல்லைங்கிறது உறுதியாகிடுச்சு.
அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 21-க்கு போயிருக்கு. இந்த விவகாரத்துல இப்போ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ட்ரி கொடுத்திருக்காரு.
மத்திய பாஜக அரசைத் தாக்கி அவர் போட்ட எக்ஸ் (X) பதிவு பயங்கர வைரல்: “CBI, ED, வருமான வரித்துறை வரிசையில, இப்போ ‘சென்சார் போர்டையும்’ எதிர்க்கட்சிகளுக்கு எதிரா ஒரு ஆயுதமா மத்திய அரசு பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கு”னு ரொம்ப காட்டமா விமர்சிச்சிருக்காரு.
ஒரு சினிமாவைக் கூட சுதந்திரமா ரிலீஸ் பண்ண விடாம பண்றது ஜனநாயகத்துக்கு எதிரானதுங்கிற அர்த்தத்துல அவரோட பதிவு இருக்கு.
படம் ரிலீஸ் ஆகும்னு டிக்கெட் புக் பண்ணி, கொண்டாட்டத்துக்குத் தயாரா இருந்த விஜய் ரசிகர்கள் இப்போ செம அப்செட்ல இருக்காங்க. “வேணும்னே எங்க அண்ணன் படத்தைக் குறி வைக்கிறாங்க”னு சோஷியல் மீடியாவுல அவங்க தங்களோட ஆத்திரத்தை வெளிப்படுத்திட்டு வர்றாங்க.


